உள்ளங்கால் அடங்கல்

உள்ளங்கால் அடங்கல்

வேறுபெயர்கள் :
1. #உள்ளங்கால்_அடங்கல் (வர்ம சூடாமணி பஞ்சீகரண பின்னல்-150)

2. உள்ளங்கால் உள்ள அடங்கல் (வ.ஞா.ஒ.மு.ச.சூ.-2200)

3. #கால்_வெள்ளை அடங்கல்

4. #வெள்ளை_முடவடங்கல் (வர்ம சரசூத்திர திறவுகோல்-36)

இடம் :‘விவரமட உள்ளங்கால் அடங்கலொன்று விசையாக அணைத்தெடு நீ நடுத்தானந்தான்தானமட உள்ளங்கால் பதிவுசெய்து தக்கமேல் முடிச்சித் தாக்கி விசையசைக்ககாணமட பதிவிருத்தி பிடித்துப்பாருகண்மணியே எழுந்திருக்கும் இன்னும் கேளு’(#வர்ம_சூடாமணி_பஞ்சீகரண_பின்னல் 1500)

‘நில்லென்ற உள்ளங்கால் தன்னிலே தான் இருக்குமந்த உள்ளங்கால் உள்ளடங்கல்’(#வர்ம_ஞான_ஒடிவுமுறிவு_சரசூத்திரம்-2200)

‘நடு உள்ளங்கால் தனிலே அடங்கல் இரண்டு’(#வர்ம_ஒடிவு_முறிவு_சரசூத்திரம்-1200)

‘ஆகுமென்ற உப்புகுற்றி அடங்க லொன்று அதன்முன்னே வெள்ளை முடவடங்கலொன்று’(#வர்ம_சரசூத்திர_திறவுகோல்-36)

‘சூட்சமட வெள்ளையதில் அடங்கல் வர்மம்’(#வர்ம_சூத்திரம்-101)

விளக்கம் :இவ்வடங்கல் உள்ளங்காலின் வெள்ளை மத்தியில் உள்ளது.

#அடங்கல்_செய்யும்_முறை :நோயாளியை படுக்கவைத்து ஊக்கமாய் கால் கொண்டு அடித்து இளக்கவேண்டும். இதற்கு நோயாளியை படுக்கவைத்து கால் இரண்டையும் அசையாமல் நீட்டி பிடித்து, வர்மம் இளக்குபவரின் கால் ஒரு முழம் பின்வாங்கி பெருவிரலின் கீழிருக்கும் பகுதி, நோயாளியின் உள்ளங்கால் வெள்ளையில் பற்றும்படி விசையாய் இரண்டு காலிலும் அடிக்கவும். இருக்கும் இயல்புக்கு தகுந்தபடி மாத்திரைகுறைத்தும், கூட்டியும் அடிக்கலாம்.

#மருத்துவப்பயன் :வர்மங்கள் இளகும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *